ஈரோட்டில் மாநில அளவிலான செஸ் போட்டி; 600 மாணவ -மாணவிகள் பங்கேற்பு

ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான செஸ் போட்டியில் 600 மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் மாநில அளவிலான செஸ் போட்டி; 600 மாணவ -மாணவிகள் பங்கேற்பு
Published on

ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான செஸ் போட்டியில் 600 மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.

மாநில செஸ் போட்டி

ஈரோடு மாவட்ட சதுரங்க சர்க்கிள் சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி, ஈரோடு இந்து கல்வி நிலைய பள்ளிக்கூட வளாகத்தில் நேற்று நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட சதுரங்க சர்கிள் செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இதில் 9 வயதுக்கு உட்பட்டோர், 13 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் பொது பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், கரூர், கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

பரிசளிப்பு விழா

அதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் இந்து குளோபல் பள்ளிக்கூட நிறுவனர் அருண்குமார் பாலுசாமி கலந்து கொண்டு வெற்றிபெற்ற மாணவ -மாணவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினார்கள்.

மேலும் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 6 சைக்கிள்கள், ஒரு எல்.இ.டி. டி.வி. வழங்கப்பட்டன. விழாவில் பிரைன் பேட்டில் நிறுவனர் திருமுருகன், இந்து குளோபல் பள்ளிக்கூட துணை முதல்வர் தமிழரசி, மற்றும் மாணவ -மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com