முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி

ஜோலார்பேட்டையில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி தொடங்கியது.
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி
Published on

முதல்-அமைச்சர் கோப்பைக்கான, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் நடந்தப்படுகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் என அனைத்து தரப்பினருக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும் 15 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட பொதுமக்களும் பங்கேற்கலாம்.

இதன் தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சேதுராஜன் வரவேற்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார், நகர மன்ற தலைவர் மா.காவியா விக்டர், துணைத் தலைவர் இந்திரா பெரியார்தாசன், ஒன்றிய கவுன்சிலர் க.உமாகன்ரங்கம், நகராட்சி ஆணையர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமை தாங்கி விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து பேசினார். விளையாட்டுப் போட்டியில் அதிகாரிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவ- மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com