பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்

பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.
பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
Published on

கூடைப்பந்து-கோ-கோ போட்டிகள்

பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று பெரம்பலூர் குறு வட்ட அளவில் 14, 17, 19 வயதுகளுக்கு உட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டியும், மாணவிகளுக்கான கோ-கோ போட்டியும் தண்ணீர்பந்தல் இந்திரா நகரில் உள்ள ரோவர் உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டிகளில் பெரம்பலூர் குறுவட்ட அளவில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த அணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடின.

சான்றிதழ்

போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகளின் வீரர்-வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முதலிடம் பிடித்த அணிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும், பெரம்பலூர் குறு வட்ட விளையாட்டு போட்டிகளுக்கான செயலாளருமான ஆறுமுகம், உடற்கல்வி ஆசிரியரும், இணை செயலாளருமான பாஸ்கர் ஆகியோர் செய்திருந்தனர்.

பெரம்பலூர் குறு வட்ட அளவில் தடகள போட்டிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) பள்ளி மாணவிகளுக்கும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாணவர்களுக்கும் பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com