

குழந்தைகள் உதவி மையம்சார்பில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் உதவி மையம் 1098 சார்பில் அனைத்து அரசு பள்ளி மாணவர்களையும் விளையாட்டில் ஈடுபட வைக்கும் முயற்சியில் அரசு பள்ளிகளில் விளையாட்டு பேட்டிகளை நடத்தி வருகிறது. அதன்படி நேற்று திருப்பத்தூர் ஒன்றியம், பெம்மிகுப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு பேட்டி நடந்தது. நிகழ்ச்சிக்கு குழந்தைகள் உதவி மைய ஒருங்கிணைப்பாளர் அருண்பிரஷாந்த் தலைமை தாங்கினார். ஜெனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கெண்டார். இதில் கோகோ உள்பட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதேபேல் நாட்றம்பள்ளி ஒன்றியம் ஜங்கலாபுரம் அரசு பள்ளியிலும் விளையாட்டு பேட்டிகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை குழந்தைகள் உதவி மையத்தினர் செய்து இருந்தனர்.