பழனியாண்டவர் கலை-பண்பாட்டு கல்லூரியில் விளையாட்டு விழா

பழனியில் உள்ள பழனியாண்டவர் கலை-பண்பாட்டு கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெற்றது.
பழனியாண்டவர் கலை-பண்பாட்டு கல்லூரியில் விளையாட்டு விழா
Published on

பழனியில் உள்ள பழனியாண்டவர் கலை-பண்பாட்டு கல்லூரியில் 57-வது ஆண்டு விளையாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கல்லூரி தாளாளரும், பழனி கோவில் இணை ஆணையருமான நடராஜன் தலைமை தாங்கினார். துணை ஆணையர் பிரகாஷ், முதல்வர் (பொறுப்பு) பிரபாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் அறங்காவலர் மணிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

விழாவில் சர்வதேச, தேசிய போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் தீபம் ஏந்தி வந்து கல்லூரி தாளாளரிடம் வழங்கினர். தொடர்ந்து அவர் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார். பின்னர் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் உடற்கல்வி துறை மாணவர்கள், செஞ்சிலுவை சங்க மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. அதையடுத்து விளையாட்டு போட்டி உறுதிமொழி ஏற்றல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் ஓட்டப்பந்தயம் உள்பட பல்வேறு தடகள போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த கல்வியாண்டில் பணி ஓய்வுபெறவுள்ள பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் பேராசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com