

பழனியில் உள்ள பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில், 53-வது விளையாட்டு விழா நடந்தது. விழாவுக்கு பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். துணை ஆணையர் பிரகாஷ், கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர் மணிமாறன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
பின்னர் இணை ஆணையர் நடராஜன், தேசியக்கொடி ஏற்றி வைத்து விளையாட்டின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். பின்னர் தடகளம், குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல் தேசிய அளவில் நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது. முடிவில் மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.