பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரியில் விளையாட்டு விழா

பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விளையாட்டு விழா நடைபெற்றது
பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரியில் விளையாட்டு விழா
Published on

பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். மாணவர் மன்ற ஆலோசகர் கீதா ராணி வரவேற்று பேசினார். விளையாட்டு குழு தலைவர் விஜய்ராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். விளையாட்டு குழு துணை தலைவர் செல்சியா உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இதில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய கூடைப்பந்து அணியின் தலைவர் முயின் பெக், பெரியகுளம் உதவி வன பாதுகாவலர் வேல்மணி நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி உதவி ஆசிரியர்கள் சதீஷ்பாபு, பாரதபிரியா ஆகியோர் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com