வாகனம் மோதி புள்ளிமான் சாவு

வாகனம் மோதி புள்ளிமான் இறந்தது.
வாகனம் மோதி புள்ளிமான் சாவு
Published on

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியை அடுத்த மண்மலை மேடு காட்டுப்பகுதியில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. நேற்று அதிகாலையில் புள்ளிமான் ஒன்று காட்டை விட்டு இறங்கி ரோட்டை கடந்து செல்ல முயன்றது. அப்போது அந்த வழியில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மான் மீது மோதியது. இந்த விபத்தில் அதே இடத்தில் மான் இறந்தது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் வனத்துறை ரேஞ்சர் சதாசிவம் உத்தரவின் பேரில் வனச்சரகர் பவுல் சம்பவ இடத்தை பார்வையிட்டார். இறந்த மான் 2 வயதுடைய பெண் மான் ஆகும். இறந்த மானை பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com