கிணற்றில் தவறிவிழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறிவிழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு
Published on

கெங்கவல்லி:-

கெங்கவல்லி அருகே மண்மலை ஊராட்சி காட்டு கொட்டாய் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் சுற்றி வருகின்றன. இந்த நிலையில் நேற்று மாலை தனசேகரின் விவசாய தோட்டத்திற்கு வந்த ஆண் புள்ளிமான் ஒன்று கால் தவறி அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தது. 30 அடி ஆழ கிணற்றில் தவறிவிழுந்த அந்த புள்ளிமான் 20 அடி உயரத்திற்கு தேங்கி இருந்த தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும், கெங்கவல்லி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் வேலுமணி தலைமையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் தத்தளித்த புள்ளி மானை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com