

பாபநாசம்:
பாபநாசம் தாலுகா திருப்பாலைத்துறையில் உள்ள ஜெயமங்கள காளியம்மன் கோவிலில் வருடாந்திர வசந்த விழா நடைபெற்று வருகிறது விழாவையொட்டி குடமுருட்டி ஆறு படித்துறையில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு வாண வேடிக்கையுடன் அம்மன் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.