கடலில் மூழ்கிய ராமேசுவரம் படகை மீட்க உதவிய இலங்கை கடற்படை

மீட்கப்பட்ட படகுடன் ராமேசுவரம் மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்பினர்.
கடலில் மூழ்கிய ராமேசுவரம் படகை மீட்க உதவிய இலங்கை கடற்படை
Published on

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு நாட்டுப்படகில் பிரகாஷ், சதீஷ், குகன், நம்பு பிரகாஷ் ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். நடுக்கடலில் மீன் பிடித்தபோது பலத்த சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றத்தால் படகு கடலில் மூழ்கியது.கடலில் தத்தளித்த மீனவர்களை அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீட்டனர்.

கடலில் மூழ்கி கிடக்கும் அந்த படகை மீட்பதற்காக ராமேசுவரத்தில் மீன் துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்று 3 நாட்டுப்படகுகளில் மீனவர்கள் சென்றனர். அந்த படகை மீட்க முடியாமல் திணறினர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மூழ்கிய படகை மீட்பதற்கு உதவி செய்தனர். மீட்கப்பட்ட படகுடன் ராமேசுவரம் மீனவர்கள் பாதுகாப்பாக கரை திரும்பினர்.

இலங்கை கடற்படையினரின் இந்த செயல் மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. படகு மீட்கப்பட்டாலும் படகின் என்ஜின் பெரிய அளவில் சேதம் அடைந்ததால், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com