இலங்கை எம்.பி. ராமநாதன் அர்ச்சுனாவை சந்தித்து கலந்துரையாடினோம்: ஆதவ் அர்ஜுனா

தலைமை செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனை இலங்கை எம்.பி ராமநாதன் அர்ச்சுனா சந்தித்து பேசினார்.
இலங்கை எம்.பி. ராமநாதன் அர்ச்சுனாவை சந்தித்து கலந்துரையாடினோம்: ஆதவ் அர்ஜுனா
Published on

சென்னை,

பொதுப்பணி மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-

இலங்கை நாடாளுமன்ற எம்.பி இராமநாதன் அர்ச்சுனா அவர்களை இன்று மரியாதை நிமித்தமாக தலைமை செயலகம் அலுவலகத்தில் சந்தித்து உரையாடினேன்.

இரு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர நல்லுறவு, தமிழ் மக்களின் நலன், மீனவர் பாதுகாப்பு, ஒன்றுபட்ட வளர்ச்சி ஆகிய விஷயங்கள் குறித்து நட்பு ரீதியாக கலந்துரையாடினோம்.

தமிழ் மக்களின் நல்வாழ்வு மற்றும் வளமான வருங்காலம் என்ற புள்ளியில் ஆரோக்கியமான உறவில் பயணிப்போம் என்று ஒருவொருக்கொருவர் தெரிவித்து மகிழ்ந்தோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com