தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டியதாக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
தமிழக மீனவர்கள் 7 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
Published on

ராமேஸ்வரம்,

தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும் மீனவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது.

இந்நிலையில் ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 7 மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு அருகே இரண்டு விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டு, அங்கு விசாரணை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com