நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்கள் நடத்திவரும் சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
Published on

நாகை,

சமீப காலமாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. அத்துடன் கடற்கொள்ளையர்களின் தாக்குதல்களும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள், கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், நான்கு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி ஒரு லட்சம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்கள், வலைகளையும் அபகரித்து சென்றுள்ளனர். கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் காயமடைந்த இரண்டு மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல்படை போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்திவரும் சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com