நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்


நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
x
தினத்தந்தி 6 Oct 2025 9:07 AM IST (Updated: 6 Oct 2025 9:31 AM IST)
t-max-icont-min-icon

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

நாகை,

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், கடற்கொள்ளையர்கள் தாக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 11 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

மேலும் மீனவர்களை இரும்புகம்பி, கத்தி, கட்டை, பைப், கயிறு உள்ளிட்ட ஆயுதங்களால் கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். இதில் 11 பேர் மீனவர்களும் காயம் அடைந்துள்ளனர். மீனவர்களிடம் இருந்து செல்போன், பைபர் படகில் உள்ள இன்ஜின் ரூ. 4 லட்சம் மதிப்பிலான மீன்பிடி உபகரண பொருட்களை பறித்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து மீனவர்கள் அவசரமாக கரை திரும்பினர். காயமடைந்த மீனவர்களில் 10 பேர் நாகை அரசு மருத்துவமனையிலும், தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் ஒரு மீனவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 More update

Next Story