இலங்கை பொருளாதார நெருக்கடி - தனுஷ்கோடியில் குடும்பத்துடன் தஞ்சமடைந்த மாற்றுத்திறனாளி

இலங்கையில் இருந்து இதுவரை 184 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.
இலங்கை பொருளாதார நெருக்கடி - தனுஷ்கோடியில் குடும்பத்துடன் தஞ்சமடைந்த மாற்றுத்திறனாளி
Published on

ராமேசுவரம்,

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளதார நெருக்கடியால் உணவு உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இலங்கையில் உள்ளவர்கள் தமிழகத்தை நோக்கி தஞ்சமடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கையின் திருக்கடலூரை சேர்ந்த ஜனார்த்தன் என்ற மாற்றுத்திறனாளி, தனது மனைவி பிரவீனா மற்றும் இரு குழந்தைகளுடன் ராமேசுவரத்திற்கு வந்துள்ளார். படகு மூலம் சேராங்கோட்டை பகுதிக்கு வந்திறங்கிய அவர்களை, ராமேஸ்வரம் கடற்படையினர் தடுத்து நிறுத்தினர். மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அவர்களை கடற்படை போலீசார் விசாரித்தனர்.

அதில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், அங்கு வாழ வழியில்லாமல் தனுஷ்கோடிக்கு வந்தததாக ஜனார்த்தனன் கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இலங்கையில் இருந்து இதுவரை184 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com