

திருச்சி,
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் அரங்கநாத சுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ திருத்தலங்களுள் முதல் திருத்தலமாக இந்த கோவில் திகழ்கிறது.
இந்நிலையில், அரங்கநாத சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு கோவில் உண்டியலில் பணம், தங்கம், வெள்ளி பொருகளை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் மாதம் தோறும் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படுகின்றன.
இந்நிலையில், அரங்கநாத சுவாமி கோவிலில் இன்று (28.04.2026) மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் கணக்கிடப்பட்டத்தில் ரூபாய் 69,93,601, தங்கம் 78.900 கிராம், வெள்ளி 840.200 கிராம், மற்றும் 283 வெளிநாட்டு ரூபாய் தாள்கள் எண்ணிக்கைகள் உண்டியல் காணிக்கை வருவாய் ஆக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.