

ஸ்ரீரங்கம்,
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வழிபாட்டுத்தலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பக்தர்கள் அனுமதியின்றி வழக்கமான பூஜைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் ஊரடங்கில் கூடுதல் தளர்வு அளிக்கப்பட்டதால் இன்று (திங்கட்கிழமை) முதல் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர்.
அதன்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை, காலை 9 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை, மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். பூஜை பொருட்கள் கொண்டு வர அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.