ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியல்களில் ரூ.73¾ லட்சம் காணிக்கை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியல்களில் ரூ.73¾ லட்சம் காணிக்கை கிடைத்தது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உண்டியல்களில் ரூ.73¾ லட்சம் காணிக்கை
Published on

ஸ்ரீரங்கம்:

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை மாதந்தோறும் உண்டியலை திறந்து எண்ணுவது வழக்கம். அதன்படி இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று கருட மண்பத்தில் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ரூ.73 லட்சத்து 86 ஆயிரத்து 659 ரொக்கமும், 128 கிராம் தங்கமும், 910 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 256-ம் இருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com