புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி

புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது.
புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி
Published on

ஆலங்குடி அருகே கே.ராசியமங்கலம் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய விழாவையொட்டி கடந்த 23-ந் தேதி அருட்தந்தையர்களால் புனிதம் செய்து கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து தினமும் நவநாள் திருப்பலியும், தேர்பவனியும் நடைபெற்றது. பின்னர் கூட்டுப்பாடல் திருப்பலியும் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு அருட்தந்தையர்களால் திருவிழா கூட்டு பாடல் திருப்பலியும், புனித அந்தோணியாரின் ஆடம்பர அலங்கார தேர்பவனியும் நடைபெற்றது. நேற்று காலை கூட்டுப்பாடல் திருப்பலியை தொடர்ந்து புனித அந்தோணியாரின் கொடி இறக்கம் நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com