புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி

குத்தாலம் அருகே குழந்தை வரம் தரும் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி
Published on: 

குத்தாலம்:

குத்தாலம் அருகே குழந்தை வரம் தரும் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேர்பவனி

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோமல் பாலக்கரை பகுதியில் குழந்தை வரம் தரும் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு 76-ம் ஆண்டு தேர்பவனி திருவிழா கடந்த 27-ந் தேதி திருப்பலி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நேற்று முன்தினம் இரவு பேண்ட் வாத்தியம் இசை நிகழ்ச்சியுடன் வாணவேடிக்கைகள் முழங்க மலர் மற்றும் மின்அலங்காரத்துடன் தேர்பவனி திருவிழா நடந்தது. அந்தோணியார் ஆலயத்தில் இருந்து தொடங்கிய தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து ஆலயத்தை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழா திருப்பலி

நேற்று மாந்தை பங்குத் தந்தை ஜோசப் ஜெரால்ட் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. பின்னர் கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கோமல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு ஆசி பெற்றனர். விழா ஏற்பாடுகளை கோமல் கிராம தலைவர்கள், மற்றும் விழாக்குழுவினர், இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com