புனித ஹங்கேரி எலிசபெத்தம்மாள் ஆலய தேர் பவனி

புனித ஹங்கேரி எலிசபெத்தம்மாள் ஆலய தேர் பவனி நடைபெற்றது.
புனித ஹங்கேரி எலிசபெத்தம்மாள் ஆலய தேர் பவனி
Published on

அன்னவாசலில் புனித ஹங்கேரி நகர் எலிசபெத்தம்மாள் ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர் பவனி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர் பவனி கடந்த 19-ந்தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நவநாள் திருப்பலியும் சிறப்பு மறையும் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று நடைபெற்றது. இதையடுத்து, சிறப்பு திருப்பலியை பங்குதந்தை தேவராஜ் செய்தார். பின்னர் புனித ஹங்கேரி எலிசபெத்தம்மாள் தேர்பவனி வாண வேடிக்கையுடன் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலயத்தில் நிறைவடைந்தது. இதில் அன்னவாசல், வயலோகம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடி இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மற்றும் இளைஞர் மன்றத்தினர் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com