புனித ஹங்கேரி எலிசபெத்தம்மாள் ஆலய தேர்பவனி

அன்னவாசல் புனித ஹங்கேரி எலிசபெத்தம்மாள் ஆலய தேர்பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
புனித ஹங்கேரி எலிசபெத்தம்மாள் ஆலய தேர்பவனி
Published on

எலிசபெத் ஆலயம்

அன்னவாசலில் புனித ஹங்கேரி எலிசபெத்தம்மாள் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தேர் பவனி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் தேர் பவனி கடந்த 18-ந்தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து பங்குதந்தை ஜான் செல்வராஜ் தலைமையில் திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நவநாள் திருப்பலியும், சிறப்பு மறையும் நடந்தது. இதில் அன்னவாசல், வயலோகம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர்.

தேர்பவனி

திருவிழாவிற்கான திருப்பலியினை பங்குதந்தை ஜான் செல்வராஜ் செய்தார். பின்னர் புனித ஹங்கேரி எலிசபெத்தம்மாள் தேர்பவனி வாணவேடிக்கையுடன் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை வந்தடைந்தது. அதனைதொடர்ந்து திருவிழா திருப்பலியும், மலர் அலங்கார தேர்பவனியும் நடைபெற்று திருவிழா முடிவடைந்தது. இதில் அன்னவாசல் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், கிறிஸ்தவர்கள், கிராமமக்கள், முக்கியஸ்தர்கள் என சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருப்பலிகொடி இறக்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கத்தோலிக்க கிறிஸ்தவ பொதுமக்கள் மற்றும் இளைஞர் மன்றத்தினர் செய்திருந்தனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com