எஸ்.டி.ஏ.டி. அணி ஒட்டு மொத்த சாம்பியன்

எஸ்.டி.ஏ.டி. அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
எஸ்.டி.ஏ.டி. அணி ஒட்டு மொத்த சாம்பியன்
Published on

திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்ட இளையோருக்கான தடகள போட்டி அண்ணா ஸ்டேடியத்தில் கடந்த 2 நாட்கள் நடந்தது. இந்த போட்டிகளின் முடிவில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி (எஸ்.டி.ஏ.டி) 14 தங்கம், 10 வெள்ளி மற்றும் 7 வெண்கலப் பதக்கங்களை பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆர்.எஸ்.ஏ. 2-வது இடத்தை பெற்றது. பெண்கள் பிரிவில் முசிறி அமலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி 8 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 2-வது இடத்தை ஆர்.எஸ்.ஏ. பிடித்தது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலணி கமாண்டன்ட் ஆனந்தன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சுழற் கோப்பைகளை வழங்கினார். இதில் பனானாலீப் அண்டு அற்புதபவன் மனோகரன், திருச்சி மாவட்ட தடகள சங்க துணைத்தலைவர் ஸ்வர்க திவ்யதர்ஷினி, மாவட்ட செயலாளர் ராஜு, மக்கள் தொடர்பு அதிகாரி நீலமேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com