மதுரையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளரை ஆதரித்து காலையிலேயே மு.க. ஸ்டாலின் பிரசாரம்

மதுரை மக்களவை தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சு. வேங்கடேசனை ஆதரித்து மு.க. ஸ்டாலின் காலையிலேயே பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
மதுரையில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வேட்பாளரை ஆதரித்து காலையிலேயே மு.க. ஸ்டாலின் பிரசாரம்
Published on

மதுரை,

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை உள்ளன.

இந்நிலையில், மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சு. வேங்கடேசனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட அவர் அங்கு காய்கறி விற்பனை செய்வோர், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரிடம் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com