

சென்னை,
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னையில் இன்று, கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்ற மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியில் நடைபெற்ற சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு எதிராக நடந்த கொடூர குற்றங்கள், மேலும் புனிதமான தமிழக மண்ணை போதை கலாச்சாரத்தின் மூலம் சீரழித்த செயல்கள் குறித்து விரிவாக பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை “குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு” வெளியிடப்பட்டது.
தமிழகத்தை பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு தள்ளிய இந்த ஆட்சியின் செயல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நோக்கில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் மற்றும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பொறுப்பாளர் பியூஷ் கோயலின் தலைமையில் இந்த குற்றப்பத்திரிக்கை வெளியிடப்பட்டது. மக்கள் விரோத திமுக ஆட்சியின் செயல்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வைப் பெற, இந்த குற்றப்பத்திரிக்கை முக்கிய ஆதாரமாக அமைகிறது.
இந்த நிகழ்வில் பாஜக மேலிட இணை பொறுப்பாளர் ரெட்டி சுதாகர், தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, முன்னாள் தெலுங்கானா கவர்னர் மற்றும் தேர்தல் அறிக்கை குழு தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மாநில துணைத் தலைவர்கள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.