

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் வருகிற மார்ச் 7ந்தேதி காலை 10 மணிக்கு கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் அக்கட்சியின் பொதுக்குழு கூடுகிறது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடப்படுகிறது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.