தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் கீதாஜீவன் பயனாளிகளுக்கு ஆவணங்கள் வழங்கினார்


தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் கீதாஜீவன் பயனாளிகளுக்கு ஆவணங்கள் வழங்கினார்
x

மின் இணைப்பு பெயர் மாற்றம் குறித்தும், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யவும் விண்ணப்ப மனு அளித்த பயனாளிகளுக்கு உரிய ஆவணங்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் 19, 30, 31 மற்றும் 32வது வார்டுகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் டுவிபுரம் 11 வது தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் நடைபெற்றது. முகாமில் 1,343 மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப மனுக்கள், 247 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்ந்த மனுக்கள், 54 மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த மனுக்கள், 79 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்ந்த மனுக்கள் உட்பட மொத்தம் 2,071 விண்ணப்ப மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கீதாஜீவன் முகாமை பார்வையிட்டதுடன், மின் இணைப்பு பெயர் மாற்றம் குறித்தும், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யவும் விண்ணப்ப மனு அளித்த பயனாளிகளுக்கு உரிய ஆவணங்களை வழங்கினார்.

முகாமில் மாநகராட்சி உதவி ஆணையர் பாலமுருகன், தாசில்தார் முரளிதரன், சமூக பாதுகாப்பு திட்ட முருகேஸ்வரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள் கனகராஜ், கந்தசாமி, வட்டச் செயலாளர்கள் பத்மாவதி, செந்தில்குமார், பாலகுருசாமி, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் செல்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story