

சென்னை,
சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. இன்று காலை ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்றார்.
அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மு.க.ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனனர்.
முதல் அமைச்சராக பதவியேற்ற பின்பு பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்திய மு.க ஸ்டாலின் தலைமைச்செயலகம் வருகை தந்தார். முதல்வருக்கான இருக்கையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணிகளை முதல் அமைச்சர் ஸ்டாலின் தொடங்கினார்.
பதவியேற்றதும் 5 முக்கிய கோப்புகளில் முதல் அமைச்சர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். அதன் விவரம் வருமாறு:
1.கொரோனா நிவாரண நிதியாக ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும். இதில் முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் இம்மாதமே வழங்கப்படும். 2.07 கோடி அரிசி அட்டைதாரர்கள் இதனால் பலன் பெறுவார்கள்;
2. உள்ளூர் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண அட்டை
3. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு- மே 16 முதல் அமலுக்கு வருகிறது
4.தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் கட்டணத்தை அரசே ஏற்கும் வகையில் காப்பீடு
5. மனுக்கள் மீது 100 நாட்களில் தீர்வு காண உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர் திட்டத்தை செயல்படுத்த புதிய துறை உருவாக்கம்