மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுப்பவர் ஸ்டாலின் தான் - கனிமொழி எம்.பி. பேச்சு

மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுப்பவர் ஸ்டாலின்தான் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுப்பவர் ஸ்டாலின் தான் - கனிமொழி எம்.பி. பேச்சு
Published on

சென்னை,

தி.மு.க. சார்பில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்களை உள்ளடக்கிய தென்மண்டல மாநாடு விருதுநகரில் இன்று (புதன்கிழமை) மாலை நடைபெற்றது. இதற்காக விருதுநகர் பட்டம்புதூரில் 85 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அங்கு மேடை அமைக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்ற திமுக கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி பேசியதாவது:

எதிரணியினரின் கூட்டணி மக்கள் விரோத கூட்டணி. சில வாரங்களுக்கு முன் மத்திய அரசை விமர்சித்துவிட்டு தற்போது அவர்களுடனே கூட்டணி வைத்துள்ளனர். மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து குரல்கொடுப்பவர் ஸ்டாலின் தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com