சென்னையில் இன்று 11 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின் ' முகாம்

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்
சென்னையில் இன்று 11 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின் ' முகாம்
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (24.09.2025) 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (24.09.2025) திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-9ல் திருவொற்றியூர் குப்பம், சென்னை தொடக்கப்பள்ளி அருகில் உள்ள துலுகானத்தம்மன் கோவில் தெரு, மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-23ல் மேற்கு காவாங்கரையில் உள்ள ராணி சங்குபதி திருமண மண்டபம், ராயபுரம் மண்டலம் (மண்டலம்-5), வார்டு-57ல் சௌகார்பேட்டை, அண்ணா பிள்ளை தெருவில் உள்ள சந்திரபுரி டிரஸ்ட் மண்டபம், திரு.வி.க. நகர் மண்டலம் (மண்டலம்-6), வார்டு-78ல் சூளை, சச்சிதானந்தம் தெருவில் உள்ள அறிஞர் அண்ணா மாளிகை சமுதாயக் கூடம், அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-89ல் முகப்பேர் பிரதான சாலையில் உள்ள சின்னசாமி திருமண மண்டபம், அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), வார்டு-104ல் ஐ பிளாக் 28வது தெருவில் உள்ள கம்பர் குடியிருப்பு குழந்தைகள் விளையாட்டுத் திடல், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-117ல் தியாகராயநகர், கிரியப்பா சாலையில் உள்ள மாநகராட்சி சமுதாயக் கூடம், கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்10) வார்டு-132ல் டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள சமுதாயக் கூடம், வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்-11), வார்டு-146ல் மதுரவாயல், பி.எச். சாலையில் உள்ள சீதாலட்சுமி திருமண மண்டபம், பெருங்குடி மண்டலம் (மண்டலம்-14), வார்டு-183ல் பாலவாக்கம், வி.ஜி.பி. லேஅவுட் 2வது பிரதான சாலையில் உள்ள வி.ஜி.பி. லேஅவுட் பார்க், சோழிங்கநல்லூர் மண்டலம் (மண்டலம்15) வார்டு-198ல் கிராம நெடுஞ்சாலையில் உள்ள செல்லியம்மன் கோவில் மண்டபம் ஆகிய 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது .   

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com