

மதுரை,
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார். பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக அரசு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தமிழக அரசின் மீது அவதூறு கூறி சேற்றை வாரி இறைப்பதையே திமுக தலைவர் ஸ்டாலின் தனது முழு நேர பணியாக செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.
மேலும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் எதிர்கட்சிகளின் செயல்பாடு எப்படி உள்ளது என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் உற்று நோக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.