சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (17.09.2025) 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (17.09.2025) திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-6ல் பி.கெனால் சாலையில் உள்ள காளி கோவில் திறந்தவெளி இடம், மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-33ல் பாரதியார் தெருவில் உள்ள ஏழுமலை நாயக்கர் மண்டபம், தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-46ல் வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர், சி-கல்யாணபுரத்தில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி, ராயபுரம் மண்டலம் (மண்டலம்-5), வார்டு-56 பவளக்கார தெருவில் உள்ள ஜெயின் விலாஸ், திரு.வி.க. நகர் மண்டலம் (மண்டலம்-6), வார்டு-73ல் பட்டாளம், ஸ்டாரஹன்ஸ் சாலையில் உள்ள மண்டலம் 6 அலுவலகம், அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-79ல் வெங்கடாபுரம், ரெட்ஹில்ஸ் சாலையில் உள்ள அருள் ஜோதி திருமண மண்டபம், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-125ல், மயிலாப்பூர், சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்10) வார்டு-134ல் மேற்கு மாம்பலம், பக்தவசலம் தெருவில் உள்ள விளையாட்டு மைதானம், வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்11) வார்டு-144ல் மதுரவாயல், பி.எச். சாலையில் உள்ள ஶ்ரீபாக்கியலட்சுமி திருமண மண்டபம், ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்12) வார்டு-161ல் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள ஏ.ஜி.எஸ். நிதி மேல்நிலை பள்ளி, அடையாறு மண்டலம் (மண்டலம்-13), வார்டு-172 கிண்டி, ரேஸ் கோர்ஸ் உட்புற சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. தங்கும் விடுதி மைதானம், பெருங்குடி மண்டலம் (மண்டலம்14) வார்டு-186ல் உள்ளகரம், புழுதிவாக்கம் பிரதான சாலையில் உள்ள ஶ்ரீ சுமங்கலி திருமண மண்டபம் ஆகிய 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com