சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை (18.09.2025) 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (18.09.2025) மணலி மண்டலம் (மண்டலம்-2), வார்டு-18ல் எஸ்.ஆர்.எப். வித்யாலயா பள்ளி மைதானம், தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-36ல் எத்திராஜ் சாமி சாலையில் உள்ள டான் பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி, ராயபுரம் மண்டலம் (மண்டலம்-5), வார்டு-61ல் எழும்பூர், வானல்ஸ் சாலையில் உள்ள சிராஜ் மஹால், திரு.வி.க. நகர் மண்டலம் (மண்டலம்-6), வார்டு-66ல் காமராஜர் திருமண மண்டபம், அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-81ல் பழைய பரோடா வங்கி தெருவில் உள்ள எஸ்.எம்.கே. திருமண மண்டபம், அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), வார்டு-97ல் அயனாவரம், வெள்ளாள தெருவில் உள்ள சென்னை தொடக்கப்பள்ளி விளையாட்டு மைதானம், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-114ல் சேப்பாக்கம், சி.என்.கே. சாலையில் உள்ள தனியார் மைதானம், கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்-10), வார்டு-139ல் ஜாபர்கான்பேட்டை, ஆர்.ஆர். காலனி 2வது குறுக்கு தெருவில் உள்ள விளையாட்டு திடல், ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்-12), வார்டு-165ல் வானுவம்பேட்டை, பழண்டியம்மன் கோவில் தெருவில் உள்ள ஶ்ரீபழண்டியம்மன் திருமண மண்டபம், சோழிங்கநல்லூர் மண்டலம் (மண்டலம்-15), வார்டு-195ல் துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள எலிம் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகிய 10 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com