மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் குழு: புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்பு

மாநில ஆலோசனை குழு உறுப்பினருக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் நவம்பர் 13ம் தேதிக்குள் விண்ணப்பித்திட தெரிவிக்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனைக் குழு
Published on: 

சென்னை,

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை குழு (State Advisory Board) புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்த தகவலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் உரிமை விதிகள் 2018 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை குழுவில் (State Advisory Board) உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. தற்போது இக்குழுவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால் புதியதாக உறுப்பினர்களை நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்படி மாநில ஆலோசனை குழு உறுப்பினருக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் 13.11.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பித்திட தெரிவிக்கப்படுகிறது. மேலும், விண்ணப்பிக்க தொடர்பான விவரங்கள் மற்றும் படிவங்கள் https://www.scd.tn.gov.in/_இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com