மாநில கிரிக்கெட் போட்டி

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க 2023-2024-ம் ஆண்டு 14 வயதுக்கு உட்பட்டோருக்கான 2-ம் சுற்று மாநில கிரிக்கெட் போட்டி சேலம் இரும்பாலை விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது
மாநில கிரிக்கெட் போட்டி
Published on

சூரமங்கலம்:-

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க 2023-2024-ம் ஆண்டு 14 வயதுக்கு உட்பட்டோருக்கான 2-ம் சுற்று மாநில கிரிக்கெட் போட்டி சேலம் இரும்பாலை விளையாட்டு மைதானத்தில் நடக்கிறது. சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, கிரிக்கெட் விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார். சேலம் மாவட்ட செயலாளர் எல்.ஆர்.என். பாபுகுமார் வரவேற்றார். போட்டியில் சேலம், தர்மபுரி மாவட்ட அணிகள் மோதின. 90 ஓவர் கொண்ட இந்த போட்டி இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்து நடைபெற உள்ள கால் இறுதி சுற்றுக்கு முன்னேறும். 14 வயது உட்பட்டோருக்கான 36 மாவட்ட அணிகளுக்கு இடையேயான முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்து அதில் வெற்றி பெற்ற 18 அணிகள் தற்போது இரண்டாம் சுற்றில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com