மாநில கால்பந்து போட்டி; தமிழ்நாடு போலீஸ் அணி முதலிடம்

ஆத்தூர் அருகே நடந்த மாநில கால்பந்து போட்டியில் தமிழ்நாடு போலீஸ் அணி முதலிடம் பிடித்தது.
மாநில கால்பந்து போட்டி; தமிழ்நாடு போலீஸ் அணி முதலிடம்
Published on

ஆறுமுகநேரி:

ஆத்தூரை அடுத்துள்ள புன்னக்காயல் புனித வளன் கால்பந்தாட்ட கழகத்தின் சார்பில் 50-வது ஆண்டு பொன்விழா மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் தமிழ்நாடு போலீஸ் அணியும், திருச்சி லென்ஸ் அணியும் விளையாடியது. இதில் தமிழ்நாடு போலீஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் திருச்சியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு புன்னக்காயலைச் சேர்ந்த சென்னை தொழிலதிபர் வசந்த் பிஞ்ஞேயிரா தலைமை தாங்கினார். நிர்வாக கமிட்டி தலைவர் எடிசன் பர்னாண்டோ, நமிதா பிஞ்ஞேயிரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டி குழு ஒருங்கிணைப்பாளர் சந்திரபோஸ் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கால்பந்து கழகத்தின் தலைவர் ஜோ சேஷையா வில்லவராயர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக்கோப்பை வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் சகாயராஜ் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com