குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 9 April 2025 10:16 AM IST (Updated: 9 April 2025 12:10 PM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் நேற்று மரணம் அடைந்தார்.

சென்னை,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் நேற்று மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் மறைவுற்ற செய்தியை அறிந்து வேதனையும், வருத்தமும் அடைந்தேன். மறைந்த குமரி அனந்தன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன்.

நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழ்ச் சமுதாயத்திற்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றிய குமரி அனந்தன் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் "தகைசால் தமிழர்" விருது கடந்த ஆண்டு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தமிழே தன் மூச்செனத் தமிழ்த் திருப்பணிக்காக வாழ்ந்திட்ட குமரி அனந்தன் அவர்களின் பெருவாழ்வைப் போற்றிடும் வகையில், அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்;

1 More update

Next Story