மாநில கபடி போட்டி

முக்கூடல் அருகே மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது.
மாநில கபடி போட்டி
Published on

முக்கூடல்:

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறை புனித சின்னப்பர் ஆலய 10-ம் திருவிழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. சிங்கம்பாறையில் அமைந்துள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் விளையாட்டு திடலில் நடந்த இந்த போட்டியை தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் மற்றும் சிங்கம்பாறை அருட்தந்தை அருள்நேசமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

போட்டியில் மொத்தம் 16 அணிகள் மோதின. முதல் பரிசான ரூ.40 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பையை திருநெல்வேலி ஏ.பி.பி. அணி பெற்றது. மணிமுத்தாறு காவலர்கள் அணி அடுத்த பரிசான ரூ.30 ஆயிரம் பெற்றது. 3-வதாக கீழப்பாவூர் அணி ரூ.20 ஆயிரத்தையும், நான்காவதாக தூத்துக்குடி துரைசிங்கம் அணி ரூ.15 ஆயித்தையும் பெற்றது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ்பாண்டியன் கலந்து கொண்டார். போட்டிக்கான ஏற்பாடுகளை சிங்கம்பாறை புனித சின்னப்பர் விளையாட்டுக்கழகமும், இளையோர் நல இயக்கமும் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com