வீரபாண்டியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி

வீரபாண்டியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
வீரபாண்டியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி
Published on

தேனி அருகே வீரபாண்டியில் உள்ள சவுராஷ்டிரா தேனி கலைக்கல்லூரியில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. கடந்த 20-ந்தேதி தொடங்கிய போட்டிகள் நேற்று வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 32 அணிகள் கலந்துகொண்டன.

போட்டியில் கோட்டூர் மில்லேனியம் அணி முதலிடம் பிடித்து ரூ.25 ஆயிரம் பரிசை தட்டிச்சென்றது. வடுகபட்டி ஸ்கார்பியன் அணி 2-ம் இடத்தை பிடித்து ரூ.15 ஆயிரத்தையும், கோட்டூர் கிரிக்கெட் கிளப் அணி 3-ம் இடத்த பிடித்து ரூ.10 ஆயிரத்தையும், தேனி என்.சி.சி. அணி 4-ம் இடத்தை பிடித்து ரூ.5 ஆயிரத்தையும் பரிசாக வென்றன.

இதையடுத்து போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு சவுராஷ்டிரா கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் முன்னா சுருதி பரிசுத்தொகை மற்றும் சுழற்கோப்பைகளை வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் ராஜதுரை செய்திருந்தார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com