மாநில அளவிலான சிலம்ப போட்டி

மாநில அளவிலான சிலம்ப போட்டி நடந்தது.
மாநில அளவிலான சிலம்ப போட்டி
Published on: 

தமிழர்களின் பாரம்பரிய சிலம்ப கலையை பிரபலப்படுத்தவும், மரபு வழி சிலம்ப கலையை இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் உலக சிலம்ப இளையோர் சங்கம் சார்பில் மாநில அளவிலான சிலம்ப போட்டி திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை உள்பட 25 மாவட்டங்களில் இருந்து ஏராளமான வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் குத்துவரிசை, நெடுங்கம்பு வீச்சு, நடுக்கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு, தொடுமுறை கம்பு சண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான சிலம்ப போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொருவரின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், உலக சிலம்ப இளையோர் சங்க செயலாளர் மோகன் ஆகியோர் கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com