பெண்கள் புகார் அளிக்க மாநில அளவில் ரகசிய பிரிவு: தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்

தி.மு.க. ஆட்சியில் பெண்கள் தைரியமாக புகார் கொடுப்பதற்காக மாநில அளவில் ரகசிய பிரிவு ஏற்படுத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெண்கள் புகார் அளிக்க மாநில அளவில் ரகசிய பிரிவு: தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்
Published on

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னை வண்ணாரப்பேட்டையில் 13 வயது சிறுமிக்கு நிகழ்ந்த சம்பவத்தை படிக்கும் போது கண்கள் குளமாவதாக தெரிவித்துள்ளார். பெண் குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்களும், போக்சோ சட்டமும் படுதோல்வி அடைந்ததையே இது காட்டுவதாக அவர் கூறியுள்ளார்.

வேலியே பயிரை மேய்வது போல, காவல் துறை ஆய்வாளர் ஒருவரே இந்த குற்றத்தில் ஈடுபட்டது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ள ஸ்டாலின், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவ மாணவிகளுக்கு கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் தோற்று விட்டதை இது காட்டுவதாக கூறியுள்ளார்.

பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர் கவனமுடன் இருக்க வேண்டும் என்று இரு கை கூப்பி வேண்டுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், தி.மு.க. ஆட்சியில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, மாவட்ட வாரியாக தனி நீதிமன்றம் அமைத்து, ஒரு நாள் கூட தாமதமின்றி தண்டனை பெற்று தரப்படும் என்றும் ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெண்கள் தைரியமாக புகார் கொடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் ரகசிய பிரிவு ஒன்று மாநில அளவில் உருவாக்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com