மாநில அளவிலான யோகா போட்டி

ராஜபாளையத்தில் மாநில அளவிலான யோகா போட்டி நடைபெற்றது.
மாநில அளவிலான யோகா போட்டி
Published on

ராஜபாளையம்

ராஜபாளையம் மதுரை சாலையில் அமைந்துள்ள அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளியில் யுனைட்டட் யோகா மற்றும் கிங்மேக்கர் விளையாட்டு கழகம் சார்பில் யோகா போட்டிகள் நடைபெற்றது. மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டிகளில் சென்னை, கோவை, மதுரை, விருதுநகர், நெல்லை, தென்காசி, விழுப்புரம், குமரி ஆகிய பகுதிகளில் உள்ள 32 பள்ளிகளில் பயிலும் 1,452 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். வயதின் அடிப்படையில் 9 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவ, மாணவிகள் எண்ணற்ற யோகாசனங்களை செய்தனர். இறுதியில் ஒட்டு மொத்த பரிசை முதுகுடியை சேர்ந்த செயின்ட் ஜோசப் பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றனர். மேலும் ஒவ்வொரு பிரிவிலும் அதிக புள்ளிகள் பெற்ற 5 மாணவர்கள் மற்றும் 4 மாணவிகள் என 9 பேருக்கு தனி நபர் பரிசுகளும் வழங்கப்பட்டது. இ்ந்த போட்டியின் நடுவில் தேவிபட்டினத்தை சேர்ந்த இளைஞர்கள் மள்ளர் கம்பத்தின் உச்சியில் அமர்ந்து யோகா செய்து காட்டினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com