‘உயர்கல்விக்கான மாநில கொள்கை விரைவில் வெளியீடு’ - அமைச்சர் கோவி.செழியன் தகவல்

மாணவர்களின் நலன்களை காக்கும் வகையில் உயர்கல்விக்கான கல்வி கொள்கை இருக்கும் என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“உயர்கல்விக்கான மாநில கல்வி கொள்கை தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. உயர்கல்வித்துறையின் உயர்ந்த மாண்பை கட்டிக் காக்க வேண்டும் என முதல்-அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். எனவே, உரிய நேரத்தில் உரிய முடிவுகள் எடுக்கப்பட்டு மாணவர்களின் நலன் காக்கப்படும்.
மாணவர்களின் நலன்களை காக்கும் வகையில் உயர்கல்விக்கான கல்வி கொள்கை இருக்கும். உயர்கல்விக்கான மாநில கல்வி கொள்கை விரைவில் வெளியிடப்படும். அதற்கான காலவரம்பை தற்போது இறுதி செய்ய முடியாது. இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து பேசி தகவல் தெரிவிக்கப்படும்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story






