

சென்னை,
பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை இன்று சமூக வலைதளம் மூலம் நேரலையில் பேசினார். அப்போது அவர் புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கப் போவதாக அறிவித்தார். மேலும் அவர் தனது கட்சி பொதுத்தேர்தலில் போட்டியிடும் என அறிவித்தார்.
அண்ணாமலை இன்று அரசியலை கட்சியை தொடங்கியது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு தனது இயக்கத்தில் சேர்வதற்கான இணையதள முகவரியையும் தெரிவித்தார். www.wetheleader.org இணையதளத்தில் தங்கள் பெயர், மொபைல் எண்ணை பதிவு செய்து பலர் உறுப்பினர்களாக இணைந்து வருகின்றனர். தற்போது வரை 7.53 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் ஆவர்.
இந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகுவதாக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் அறிவித்துள்ளார். அண்ணாமலையின் இயக்கத்திற்கு ஆதரவளிப்பதாக கரு.நாகராஜன் அறிவித்துள்ளார். ஆற்றல் மிக்க துணிச்சலான தலைவர் அண்ணாமலை என்றும் யார் தவறு செய்தாலும் அவர் சுட்டிக்காட்டுவார் என கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.