தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலம், நீர்வளம் மாசடைந்துள்ளது: சுல்தான் இஸ்மாயில் குழு அறிக்கை

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலம், நீர்வளம் மாசடைந்துள்ளது என்று பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினை தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த குழுவானது தற்போது பாதிப்புகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நிலம், நீர்வளம் மாசடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கழிவுகளை கையாண்ட முறைகளில் பல்வேறு தவறுகள் உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தமிழக அரசுக்கு விளக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com