

சென்னை,
கடந்த 6 ஆம் தேதி நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 26 லட்சத்து 3 ஆயிரத்து 156 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 31 லட்சத்து 71 ஆயிரத்து 736 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 1,419 பேரும் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
மொத்தம் உள்ள 6 கோடியே 28 லட்சம் வாக்காளர்களில், 4 கோடியே 57 லட்சத்து 76 ஆயிரத்து 311 பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதில் ஒரு கோடியே 71 லட்சம் பேர் தங்கள் வாக்குகளை செலுத்தவில்லை. பதிவு செய்யப்பட்ட வாக்குகள் அனைத்தும் வருகின்ற மே 2 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 76 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைத்து எண்ணப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.