வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படாத நிலை

வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படாத நிலை உள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படாத நிலை
Published on

மாவட்ட தேர்தல் அதிகாரி வாக்காளர் அடையாள அட்டையை தவற விட்டவர்கள் மற்றும் புதிய வாக்காளர் அட்டைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்கள் கியூஆர்கோடு மூலம் ஸ்கேன் பதிவுசெய்து மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் தேர்தல் அலுவலகத்திற்கு சென்று அசல் வாக்காளர் அடையாளஅட்டை பெற்று வந்தனர். ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாக்காளர் அடையாள அட்டைகோரி விண்ணப்பித்தவர்கள் அடையாள அட்டை பெற முடியாத நிலையில் தவிக்கின்றனர். இதுபற்றி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் விசாரித்தால் வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கான தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்து விட்ட நிலையில் புதிய ஒப்பந்த நிறுவனம் நியமிக்கப்படாததால் வாக்காளர் அடையாள அட்டை வழங்க முடியாத நிலை நீடிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பெரும்பாலானோர் நலத்திட்ட உதவி பெறுவதற்கும், இதர அலுவல் நடைமுறைக்கும், வாக்காளர் அடையாள அட்டையை ஆவணமாக பயன்படுத்தி வரும் நிலையில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாத நிலையில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com