

தமிழக நிதி அமைச்சர் மரியவில்சன் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந் தேதி புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குளோத் மற்றும் அவரது மனைவியை வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படு கிறது. இதுகுறித்த புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி முதலாவது குற்றவியல் கோர்ட்டில் நீதி பதி சந்திரசேகர் (பொறுப்பு) முன்னிலையில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு வருகிற 21-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இதற்கி டையே புதுச்சேரி மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் கடந்த 11-ந் தேதி அமைச்சர் மரியவில்சனை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என அவரது தரப்பில் வக்கீல் மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஆனந்த், வழக்கை விசாரிக்க நேற்று வரை இடைக்கால தடை விதித்து இருந்தார். இந்த வழக்கு நேற்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இடைக்கால தடையை வருகிற 25-ந்தேதி வரை நீடித்து உத்தரவிட்டார்.