விடுதியில் தங்கி 3 நாள் உல்லாசம்; காதலனிடமிருந்து தப்பி கழிவறையில் பதுங்கிய இளம்பெண்..அடுத்து நடந்த சம்பவம்

இருவரும் வார இறுதி நாட்களில் சந்தித்து சொகுசு ஓட்டலில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.
சென்னை,
சென்னை திருவான்மியூர் தனியார் விடுதியில் காதலியுடன் தங்கி 3 நாட்களாக அடிக்கடி உல்லாசமாக இருந்த காதலன், அரைகுறை ஆடையுடன் இருந்ததை நண்பர்களுக்கு விருந்தாக்கும் வகையில் காண்பிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து காதலனிடமிருந்து தப்பி கழிவறையில் பதுங்கிய இளம்பெண் போலீசார் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஓராண்டாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கிண்டி ஓட்டலில் உள்ள பப்புக்கு சென்றபோது கன்னியாகுமரியை சேர்ந்த சகீன் என்ற வாலிபரோடு இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். அப்போது சகீன் நான் ஏற்கனவே ஒரு பெண்ணை உயிருக்கு உயிராக காதலித்தேன் அவர் தன்னை விட்டு விட்டு வேறு ஒருவருடன் சென்று விட்டதாக கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து சகீனுக்கு ஆறுதல் கூறிய இளம்பெண் பின்னர் காதலில் விழுந்து உள்ளார். இதைத்தொடர்ந்து இருவரும் வெளியில் சென்று தங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். 3 மாதங்களுக்கு ஒருமுறை வார இறுதி நாட்களில் சந்தித்து சொகுசு ஓட்டலில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருப்பதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.
இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை சாகீன் தனது நண்பர் மற்றும் பெண் தோழியோடு சென்னைக்கு காதலியை பார்க்க வந்துள்ளார். சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து இருவரும் தங்கினார்கள்.
அப்போது இருவரும் உயர் ரக மதுபானங்களை வாங்கி வந்து அறையில் வைத்தே நன்றாக குடித்து உள்ளனர். சாகீன் மற்றும் இளம்பெண் ஒரு அறையிலும், அவரது நண்பர் பெஜின் மற்றும் அவரது தோழி வேறு ஒரு அறையிலும் தங்கி உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவில் சாகீன் இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது திடீரென அவரது நண்பர்களுக்கு கால் செய்துள்ளார். அப்போது காதலியுடன் அரைகுறை ஆடையில் இருந்ததை அவர் செல்போன் மூலமாக காட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தங்கி இருந்த கழிவறைக்கு செல்போனுடன் ஓடிச்சென்று உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு உதவிக்கேட்டு கதறி உள்ளார்.
முதலில் அவருடன் வேலை செய்யும் தோழிக்கு தான் கடத்தப்பட்டுள்ளதாகவும் தன்னை காப்பாற்றுமாறும் கூறி விடுதியின் லொக்கேஷனை ஷேர் செய்து அதனை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அதனை பார்த்த பெண்ணின் உறவினர்கள், நண்பர்கள் என பலர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த தகவல் திருவான்மியூர் போலீசாருக்கும் பறந்தது. அவர்கள் ரோந்து வாகனம் மூலமாக விரைந்து சென்று இளம்பெண்ணை மீட்பதற்காக நடவடிக்கையில் இறங்கினார்கள். இளம்பெண் அனுப்பிய லொக்ஷேனை வைத்து சம்பந்தப்பட்ட தனியார் விடுதியை சென்றடைந்த போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினார்கள்
பின்னர் இளம்பெண் காதலனோடு தங்கியிருந்த அறையை கண்டுபிடித்து அதிரடியாக உள்ளே புகுந்து அவரை பத்திரமாக மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். இது பற்றி பின்னர் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் காதலன் சகின் மற்றும் அவரது நண்பர் பெஜின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
போலீசார் விசாரிக்கும்போது காதலன் சகின் தனது நண்பரிடம் திருவனந்தபுரம் செல்வது பற்றி பேசுவதற்காகவே வீடியோ கால் செய்ததாகவும் அதனை தன்னுடன் இருந்த காதலி தவறாக புரிந்துகொண்டுவிட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் போலீசார் சகின் மீதும் அவரது நண்பர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளனர். இளம்பெண் அளித்த புகார் அடிப்படையில் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காதலனுடன் வெளியில் தங்கி உல்லாசமாக இருந்த இளம்பெண், போலீசாரின் உதவியுடன் மீட்கப்பட்ட சம்பவம் பெண்ணின் உறவினர்கள் மற்றும் தோழிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.